Sunday, January 10, 2010

வேட்டைக்காரன் ஸ்பெஷல்....(ரசித்தவை)

ஆண்டவா வேட்டைகாரனாவது ஒரு வாரம் ஒழுங்க ஓடணும் !!!


விஜய் ரசிகன்(கார்க்கி அண்ணா மாதிரி) : தலைவா..தலைவா..வேட்டைக்காரன் படம் பார்த்து முதல் காட்சியிலே 500 பேர் செத்துட்டாங்களாம்...

விஜய் : வேட்டை ஆரம்பம் ஆயிடுச்சுடோய்...

*******************************

வேட்டைக்காரன் ரீ-மிக்ஸ் பாடல்:

போஸ்டர் பார்த்தா தாங்க மாட்ட..
டிரெய்லர் பார்த்தா தூங்க மாட்ட..
படம் பார்த்த வீடு போய் சேர மாட்ட...

*******************************

காதலன் : ஐ லவ் யூ
காதலி : நான் உன்ன லவ் பண்ணலைன்னா?
காதலன் : இப்படியே பஸ் பிடிச்சு 'வேட்டைக்காரன்' படம் ரிசர்வ் பண்ண போயிடுவேன்.
காதலி : எனக்காக எப்போ நீ உயிரவே கொடுக்க முடிவெடுத்தியோ, இதுக்கு மேல என் காதலை மறைக்க விரும்பலை. ஐ லவ் யூ டூ!

*******************************

(இந்த கெட்டப்பில் நான் அனுஷ்கா-வைவிட அழகா இருக்கேன்ல..)

வேட்டைக்காரன் ஆடியோ ரிலிஸில் கே.எஸ்.ரவிக்குமார்..

என்ன பண்ணாலும் விஜய் மாதிரி வர முடியாது..

ரசிகனின் குரல் அதுவும் சரிதான்..

யாரும் விஜய் மாதிரி வர முடியாது..

அவ்வ்வ்வ்வ்வ்வ்

*******************************

டாக்டர் என் பிள்ளை பிழைச்சுக்குவானா?
விஷம் குடிச்சாக்கூட பிழைக்க வைச்சிருக்கலாம்...பையன் ரொம்ப தெளிவா வேட்டைக்காரன் டிரெய்லர் தொடர்ந்து 100 தடவை பார்த்து இருக்கான்..

*******************************

இவ்வளவு சொல்லியும் நீங்க சிரிக்கவில்லை என்றால் கடைசியா ஒன்று சொல்றேன்..

வேட்டைக்காரனில் விஜய் சிக்ஸ் பேக்கில் வருகிறாராம்....

பா.விஜய் எழுதிய கவிதைகள் !!!


நீ தலைவாரும் சீப்பிலிருந்த
கேசத்தை எடுத்து
புத்தகத்தில் வைத்தேன்
மயிலிறகு குட்டிபோடும் என்றால்
உன் மயிர் இறகு போடாதா ?

**********************

கொலைக் கருவிகளின் பட்டியலில்
நீ அணிந்திருக்கும்
கொலுசையும் சேர்த்துக்கொள்ளலாம் !

**********************

உன் கூந்தல் சிலுவையில் அறையப்படும்
மல்லிகைப்பூக்கள்
மறுநாள் மரிப்பதில்லை
உயிர்த்தெழுகின்றன

**********************

பூஜைநேரம் ஆனால்
கோயில் மணி அடிக்கிறது
நீ வரும் நேரம் ஆனால்
என் இதயத்தில் பூஜை நடக்கிறது.

**********************

உன் கால்தடங்களைக் கண்டால்
அழித்துவிடுகிறேன்
தேவதையின் பாதச்சுவடுகள்
தெருவில் கிடப்பதா ?

**********************

துணி காயப்போட
நீ மாடிக்கு வருவது
தெருவில் போகும் என்னை
துவைக்கத்தானே..!

**********************

உனக்கே தெரியாமல் நான்
உன்னை காதலித்ததிலும்
நீ என்னை காதலிப்பதாக
நினைத்துக் கொள்வதிலும்
உள்ள சுகம்
அவன் அவனுக்கு மட்டும் தெரியும்.

**********************

பா.விஜய் அவர்கள் எழுதிய 18 வயசுல என்ற புத்தகத்தில் எனக்குப் பிடித்த கவிதைகள் இவை...

கந்தகோட்டை’ விமர்சனம்

பெட்டிக்கடைகளிலும் கிடைக்கும் அளவிற்கு மலிவாகிவிட்ட மசாலா பார்முலாவில் காதல்,கத்தல், கத்தி எல்லாவற்றையும் கூட்டுவைத்து, ரசிகர்களின் கண்ணுக்கும் காதுக்கும் வேட்டு வைக்கும் படம்.ஹீரோ நகுலுக்கு காதலுக்கு சிகப்புக்கொடி காட்டும் வேலை என்றால் நாயகி பூர்னா, காதலர்களுக்கு சிகப்பு கம்பளம் விரிக்கும் சேவையில் தீவிரம் காட்டுகிறார். இருவரும் காதலர்களாக மாறும்போது இடைவேளை வருமென்பது பச்ச புள்ளைகளுக்கும் தெரிந்த்துதானே! இதிலும் அது நடக்கிறது.நகுல் சொன்ன ஐ லவ் யூவுக்கு பதில் சொல்லாமல் பஸ் ஏறும் பூர்ணாவுக்கு ஊரில் ஒரு பிரச்சனை வருகிறது. காதலியை பார்ப்பதற்காக நாகர்கோயிலுக்கு போகும் நகுலுக்கு இது தெரியவர, அடுத்த நிமிஷத்திலிருந்து ஆரம்பமாகிறது வில்லனுடனான மோதல். கடைசியில் எது நடக்கவேண்டுமோ அது நன்றாகவே நடக்கிறது.நகுல் ஸ்டூடண்டா, வேலை தேடுபவரா என்ற எந்த விபரமும் தெரியாமலேயே கடைசிவரை கண்ணாமூச்சி காட்டியிருக்கும் இயக்குனரின் திறமை ‘பளிச்சிடுகிறது’. குறைந்த பட்சம் அவரும் அவரது நண்பர்களும் வெட்டி ஆபீசர்கள் என்பதை காட்டியிருந்தலாவது நிம்மதி இருந்திருக்கும்.நகுலின் சுறுசுறுப்பு, பாட்டுக்கும் பைட்டுக்கும் தோள் கொடுத்தாலும் முக பாவணைகளில் இயல்பு காணாமல்போவது மைனஸ். காமெடி பெயரில் கடித்துகுதறுகிறார் சந்தானம், அடிக்கடி ஜட்டி போட்டிருக்கியா? என்று கேட்பதெல்லாம் அபத்தம்.”டேய் வாடா வாடா.... என் கையாலதான் உனக்கு சாவு வாடா வாடா” என்று வில்லன் சம்பத் கத்தும்போதெல்லாம் காது ஜவ்வில் விழுகிறது ஓட்டை.ஹீரோவும் வில்லனும் மோதும்போது நாம இசையுடன் மோ’தினா’ என்ன என்று நினைத்திருப்பார்போல தினா. டகட டகட டகட என்று ஒரு பின்னணி கொடுத்திருக்காருங்க பாருங்க. படத்துல அதுவும் ஒரு வில்லனாக மிரட்டுகிறது. ‘கல கல கந்தகோட்டை’ பாட்டு குத்தாட்ட ப்ரியர்களுக்கு குஷி. நகுலின் குரலில்‘உன்னை காதலி என்று சொல்லவா’ பாடல் ரசிக்கலாம். கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவில் ஆங்காங்கே அவுட்டாப் ஃபோக்கஸ்.

’கந்தகோட்டை’ நொந்தகோட்டை.

நான் ரசித்தவை...

பேச்சாளர் சுகி. சிவம் அவர்களின் தந்தையார் பெயர் அமரர் சுகி. சுப்பிரமணியம். ஒரு முறை அவருக்கு மாரடைப்பு வந்த பொழுது அவரை ஒரு மருத்துவமனையின் மாரடைப்பு பிரிவில் சேர்த்தார்கள். அங்கிருந்த நடுத்தர வயது மருத்துவர் சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளில் பரபரப்புடன் இறங்கினார். பதற்றமும், படபடப்பும் தொற்றிக் கொள்ள பம்பரமாய்ச் சுழன்றார். அவ்வப்போது செவிலித் தாய்களையும் திட்டினார்.

இவற்றையெல்லாம் படுக்கையில் படுத்துக் கொண்டிருந்தபடியே அமைதியாக கவனித்துக் கொண்டிருந்த சுகி. சுப்ரமணியம் அவர்கள் அந்த மருத்துவரை அருகில் அழைத்து, “டாக்டர்! உங்களுக்கு வாழ வேண்டிய வயது. இவ்வளவு பதற்றப்படாதீர்கள். அது உங்களது நரம்பு மண்டலத்தைத் தாக்கி இதயத்தைப் பாதிக்கும். எனக்கு சிகிச்சை அளிப்பதற்காக நீங்கள் இவ்வளவு பரபரப்புக்கு ஆளாக வேண்டிய அவசியமேயில்லை. நான் வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்திற்கு வந்து விட்டேன்! ஆனால் உங்களுக்கு இன்னும் நிறைய அத்தியாயங்கள் உண்டு கவனமாயிருங்கள்” என்றார். இதைக் கேட்டதும் மருத்துவரின் கண்கள் கலங்கி விட்டன.

“என் மருத்துவத்துறையனுபவத்தில் இது வரைக்கும் இப்படிப்பட்ட மனிதரை நான் பார்தததேயில்லை, எல்லோரும் தங்கள் உயிரை எப்படியாவது காப்பாற்றி விடும்படித்தான் என்னிடம் மன்றாடுவார்கள். ஆனால் மருத்துவனான என்னைப் பற்றி அக்கறை கொண்டு ‘உன்னைக் காப்பாற்றிக் கொள்’ என்று சொன்ன முதல் நோயாளியை இன்று தான் பார்க்கிறேன் என்று கூறி நெகிழ்ந்தார்.

பதறிய காரியம் சிதறும்!!!